ஸ்ரீ ஆதிபூத நாதர்
விசேஷ பூஜை/ஹோமம், வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோயில், ஜனவரி 14, 2022: சிறு குறிப்பு
நம்முடைய இந்து மதத்தை போலவே சாஸ்தா வழிபாடும் சனாதனமானது. நமது நாகரீகத்தை வேதகால நாகரீகம் என்று சொல்லப்படுகிறது. எந்தவொரு சந்தேகம் ஏற்பட்டாலும் வேதமே பிரமாணம் ஆகிறது. வேதம் எப்பொழுது தோன்றியது என்று எவருக்கும் தெரியாது. ஆனால் வேத காலத்துக்கு முற்பட்டவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று பார்ப்போம்.
கல்லை ஆயுதமாகவும் இலை தழைகளை ஆடைகளாகவும் அணிந்த மனிதர்கள் மிருகம் போல் ஆண்-பெண் பேதம் தெரியாமல் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு தங்களது மீறிய செயல்களில் பயந்து வாழ்ந்து வந்தனர்.
பஞ்ச பூதங்களை கண்டு பயந்த கற்கால மனிதன், ஆகாயம், வாயு, அக்னி, நீர், பூமி ஆகியவற்றை தெய்வங்களாக வணங்க வேண்டும் என்று நம்பினான். நம் கண்களால் நம்ப முடியாத அளவுக்கு பெருத்த உருவம் கொண்ட ஒன்றை பூதம் என்று அழைத்தார்கள். இவை தன்னிச்சையாக செயல்படாமல் ஒருங்கிணைந்து செல்வதற்கு ஒரு தலைவன் தேவைப் பட்டான். அவனே பூதநாதன் எனப்படும் ஐயப்ப ஸ்வாமி ஆவார். சாஸ்தாவின் மற்றொரு பெயர் பூதநாதன் என்பதாகும். இதற்கு பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்பவர் என்று பெயர்.
கடவுளாக கும்பிட வேண்டும் என்று நினைத்த கற்கால மனிதன், ஒரு குறிப்பிட்ட பாறைகளையோ மரத்தையோ வணங்க தொடங்கினான். இன்றும் திருநெல்வேலி போன்ற இடங்களில் உருவமற்ற பாறைகளை வழிபடுவது மரபு
யுகங்களின் அடிப்படையிலும் சாஸ்தா வழிபாடு தொன்மையாகவே விளங்குகிறது. பிரளய காலத்திற்குப் பிறகு, முதல் மன்வந்தரம் முதல் ஆறாவது மன்வந்தரம் வரை சாஸ்தா வழிபாடு இருந்துள்ளது. ஆறாவது மன்வந்தரத்தில் தான் மத்ஸ்ய, கூர்ம, வராக, நரஸிம்ம அவதாரங்கள் ஏற்பட்டன. இதில் முதல் மூன்று அவதாரங்களில் சாஸ்தாவே கடலுக்கும் பூமிக்கும் ஆதாரமாக விளங்கினார். பாலாழிமதனம் கடையப் பெற்று சாஸ்தா அவதாரமானதும் இக்காலத்தில் தான். இந்த கால கட்டத்தில் பூவுலகம் ஏழு த்வீபங்களாக பிரிக்கப்பட்டன. இவற்றுக்கும் அதிபதி சாஸ்தாவே ஆகும். (உ.ம்: குசாதிப: சால்மலீபதி:). நரஸிம்ம அவதாரத்தில் காத்யாயன மகரிஷியின் பெண்ணான காத்யாயனி தேவிக்கு புத்திரனாக காத்யாயினி ஸுத: என்றும் ஸ்வாமி அழைக்கப்படுகிறார். வாமனாவதாரத்தில் வாமன பூஜித: என்று அழைக்கப்படுகிறார். இவை நடந்தது க்ருத யுகத்தில் ஆகும்.
க்ருத யுகத்தில் தொடங்கி பல யுகங்களில் அவதரித்து, கலியுக ப்ரத்யக்ஷம் என்று முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடியது போல், கலியுகத்தில் பக்தர்கள் இறைவனை சரணமடைவதுமே ஸ்வாமி கலியுக தெய்வம் என்பதை பறைசாற்றுகின்றன.
ஆக நான்கு யுகங்களையும், பல மன்வந்தரங்களையும் கடந்து சாஸ்தா யுக புருஷனாக இருக்கிறான் என்பது வெள்ளிவிடைமலை.
“ஸ்ரீ பூத நாத சதா நந்தா சர்வ பூத தயாபரா
ரக்ஷ ரக்ஷ மாஹோ பாஹோ சாஸ்த்ரே துப்யம் நமோ நமஹ”
என்ற ஸ்லோகத்தில் சாஸ்தாவை பூத நாதனாக வர்ணித்து இந்த உலகையே காக்க வேண்டுகின்றோம் அல்லவா?
மஹிஷி சம்ஹாரத்தின் பொருட்டு ராஜசேகர பாண்டியனுக்கு மகனாகத் தோன்றியது சபரிமலை ஸ்ரீதர்மசாஸ்தாவின் கலியுக அவதாரம். இந்த அவதாரத்தில் நைஷ்டீக ப்ரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்கிறார் ஐயன். ஆனால் ஆதி சாஸ்தாவுக்கு பூர்ணா-புஷ்கலா என்ற இரு மனைவியர் உண்டு. அச்சன்கோவில், சொரிமுத்து ஐயனார், காடந்தேத்தி, காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மன் கோவில் போன்ற இடங்களில் பூர்ணா புஷ்களா சமேத சாஸ்தாவாக கையில் செண்டாயுதம் தரித்து இவரை காணலாம். இவரை தமிழகத்தில் ஐயனார் என்று அழைப்பார்கள். ஆதி சாஸ்தா மூவுலகங்களையும் காத்து ரட்சித்து ஆள்பவர். மழை பெய்து, நீர் வளம் நிலவளம் பெருக்கி பயிர் செழிக்க அருள்பவர். காணாமல் போன பொருட்களை திரும்ப பெற்று தருபவர். காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில் இருக்கும் சாஸ்தாவின் செண்டாயுதத்தை கொண்டு தான் கரிகால சோழன் இமய மலை வரை வென்றதாக ஒரு குறிப்பு உள்ளது.
காஞ்சி மஹா பெரியவர் எங்கள் குருநாதர் பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மாவிற்க்கு கொடுத்த அருளாணையின்படி ஆதி பூதநாதரே வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோவிலில் மூலவராக வர இருக்கிறார்.
ஸ்ரீ ஆதி பூதநாதருக்கு ஜனவரி 14 காலை 9.00 - 10.30 மணியளவில் வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோயிலில் விசேஷ பூஜை, சாஸ்தா ஹோமம் நடக்க இருக்கின்றன.
பக்தர்கள் அனைவரும் இந்த பூஜைகளில் கலந்துக்கொண்டு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்று பேரின்ப பெருவாழ்வு வாழ்ந்திட அன்புடன் அழைக்கின்றோம். நடக்க இருக்கும் சிறப்பு பூஜைகளுக்கு சங்கல்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஆன்மீக அன்பர்கள் பொருளாகவோ account இல் நேரடியாக காணிக்கை செலுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஸ்ரீ ஆதிபூத நாதர், ஐயப்பன் மற்றும் சின்மய கணபதி சிறப்பு அபிஷேகம் செய்ய தேவைப்படும் சாமான்கள்: விபூதி 1 கிலோ, பால் 3 லிட்டர், தேன் 1 கிலோ, பன்னீர் 5 லிட்டர், சந்தனம் 2 கிலோ, தாழம்பூ குங்குமம் 0.5 கிலோ, நெய் 0.5 கிலோ, இளநீர் 5, மஞ்சள் 0.5 கிலோ, தயிர் 3 கிலோ, சீக்காய் / ஸ்நான பொடி 0.5 கிலோ, ஜவ்வாது
உபயதாரர்கள் தங்களது பெயர் மற்றும் இதர விவரம் கொடுத்தால் எங்களது சிறப்பு ஆராதனை சங்கல்பத்தில் அவர்களது பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம். தங்களால் வர இயலாத சூழ்நிலையில் பிரசாதம் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
இதை தவிர உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு (குடும்பத்தினர் பிறந்தநாள், திருமணநாள் etc.) அன்னதானம் செய்ய நினைத்தால் முன்பதிவு செய்து கொள்ளலாம். அன்னதானத்துக்கு நன்கொடை அளித்து 80G வரிவிலக்கு பெறலாம். அன்னதானத்துக்கு நன்கொடை செலுத்துவதற்கு முன் 9444109431 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.