May'2022 - Ashta Sastha Temple Project Status
அஷ்ட சாஸ்தா திருக்கோவில் சார்பில் அனைவருக்கும் நமஸ்காரங்கள்,
2022 முதல் நம் கோவிலில் மாதம் ஒரு விசேஷ பூஜை நடந்து வருகிறது நம் அனைவருக்கும் தெரிந்திருக்க கூடும்.
* ஜனவரி ஆதிபூதநாதர்
* பிப்ரவரி ஞான சாஸ்தா
* மார்ச் தர்ம சாஸ்தா
* ஏப்ரல் வேத சாஸ்தா
அடுத்து மே 29 பால் குடம் எடுக்க பிளான் செய்து வருகிறோம். அதனை தொடர்ந்து ஜூன் 11 வருஷபூஜையுடன் கல்யாண வரத சாஸ்தாவுக்கு விசேஷ பூஜை செய்ய நினைக்கிறோம்.
ஜூன் 11 வருஷ பூஜை
ஜூன் 12 சாஸ்தா கல்யாணம் அஷ்ட சாஸ்தா கோயிலில் செய்ய நினைக்கிறோம்.
இதுவரை பக்தர்கள் பூஜைக்கு பல விதங்களில் ஒத்துழைப்பு அளித்துள்ளீர்கள். உங்களது பங்களிப்பிற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
ஜூன் மாதம் 2 நாட்கள் நிகழ்ச்சி என்னும்பொழுது அதற்கேற்ப ஏற்பாடுகளும் நிறைய செய்ய வேண்டி இருக்கும்.
இதை தவிர கோவில் வளாகத்தில் flooring செய்ய, 18 படி பிரதிஷ்டை போன்ற சில விஷயங்கள் ஆரம்பிக்க நினைக்கிறோம்.ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இந்த கோவில் திருப்பணியில் இணைந்து தங்களால் இயன்ற காணிக்கையை கொடுத்து உதவுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மேலே குறிப்பட்டது போல் paverblock tiles போட ஒரு சதுர அடிக்கு சுமார் 75/- செலவாகிறது. பக்தர்கள் 4 சதுர அடி (300/- ரூபாய்) காணிக்கையாக அளித்து தங்கள் விவரங்களை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து தபால் மூலம்/நேரில் பிரசாதம் அளிக்க உள்ளோம்.
சுவாமியே சரணம் ஐயப்பா
0 comments:
Post a Comment