சந்தான பிராப்தி தாயகருக்கு 24-ஜூலை-2022,ஞாயிறு (சுபகிருது வருடம் ஆடி மாதம் 8, ஏகாதசி திதி) அன்று விசேஷ அபிஷேகம்
ஸ்வாமி சரணம்,
சந்தான பிராப்தி (மக்கட்பேறு) வேண்டி சபரிமலைக்கு பிரார்த்தனையுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வருகிறார்கள். அவர்களின் பெரும்பாலானோர் பிரார்த்தனைகள் கலியுகவரதன் ஐயப்பன் அருளால் கை கூடுகின்றன.
அவரது அருள் கைகூடுவதை மேலும் எளிதாக்கி, சபரிமலைக்கு செல்ல இயலாத அன்பர்களும் அவனருள் பெரும்வண்ணம் சந்தான பிராப்தி தாயகருக்கு 24-ஜூலை-2022,ஞாயிறு (சுபகிருது வருடம் ஆடி மாதம் 8, ஏகாதசி திதி) அன்று விசேஷ அபிஷேகம் அஷ்ட சாஸ்தா திருக்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அபிஷேகம் அன்று கோவிலில் வெல்ல அடை (கேரளாவில் வெல்ல அடை/இலை அடை என்று அழைப்பர், இதையே தமிழ் நாட்டில் வெல்லபூரணம் கொழுக்கட்டை என்று அழைப்பர்) நெய்வேத்தியமாக கோவில் சார்பில் பிரசாதமாக அளிக்கப்படும். பக்தர்கள் தயிர் அபிஷேகம் செய்து பிரசாதம் எடுத்து செல்ல container கொண்டு வருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அபிஷேகம் பற்றி மேலும் விவரங்களுக்கு +918072899892 /+919444109431 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
சந்தன பிராப்தி சாஸ்தா (ஆரிய சாஸ்தா என்றும் சிலர் அழைப்பர்) நம் அஷ்ட சாஸ்தா கோவிலில் பிரதிஷ்டை செய்ய உள்ள மூர்த்தி ஆகும். இவர் சத்யகன் (செல்லப்பிள்ளை) மற்றும் பிரபாவதி என்ற மனைவியுடன் காட்சி அளிக்கிறார்.
சில்பரத்தினம் என்ற நூலில் சாஸ்தாவை பிரம்ம,விஷ்ணு, சிவனின் அம்சம் என்று குறிப்பிட்டுள்ளது. ஹரிஹர சக்திகளான லக்ஷ்மியும் துர்க்கையும் ஆதி சாஸ்தாவுக்கு பூரணா-புஷ்களாவாக அலங்கரிக்கின்றார்கள். பிரம்மனின் சக்தியான சரஸ்வதியானவள் "பிரபா" என்ற பெயரில் சாஸ்தாவை காந்தர்வ முறையில் மணந்து "சத்யகன்" என்ற செல்லப்பிள்ளையுடன் கொலுவிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
பிரபாவதி சாஸ்தா காந்தர்வ விவாஹம் அடிப்படையில் எங்கள் குருநாதர் இயற்றிய சாஸ்த்ரு அஷ்டபதி அமைந்துள்ளது.
கல்லிடைக்குறிச்சி, கொச்சி, நூரணி போன்ற பல இடங்களில் நடைபெற்று வரும் சாஸ்தா ப்ரீதியில் செல்லப்பிள்ளைக்கு தனி ஸ்தானம் உண்டு.
ஸ்ரீ பூதநாத கராவலம்பத்தில் "சம்பூர்ண பக்த வர சந்ததி சீல"என்று வருகிறது. சாஸ்தாவின் மூலமந்திரத்தில் "புத்ரலாபாய" என்று வருகிறது.
திருவல்லகாவு என்ற இடத்தில் சாஸ்தா பிரபாவதி சத்யகனுடன் காட்சி அளிக்கிறார். மேலே குறிப்பிட்டது போல் சரஸ்வதி ஸ்வரூபமான ப்ரபாவதியுடன் காட்சி அளிப்பதால் அந்த கோவிலில் சாஸ்தாவை ஞான மூர்த்தியாக வழிபடுகின்றனர்.
பாலக்காடு அருகே செருப்பளாசேரி என்ற இடத்தில் சத்யகன் பிரபாவதியுடன் சாஸ்தாவை வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் சந்தான பிராப்திக்கு வெல்ல-அடை நெய்வேத்தியமாக வைக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment