ஞான சாஸ்தா விசேஷ பூஜை, வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோயிலில் 19/02/2022, பிலவ வருடம் மாசி மாதம் 2, திரிதியை, உத்திரம்
ஞான சாஸ்தா விசேஷ பூஜை, வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோயிலில் 19/02/2022, பிலவ வருடம் மாசி மாதம் 2, திரிதியை, உத்திரம் தினத்தன்று விமரிசையாக நடந்தது.
ஞான சாஸ்தா (வித்யா சாஸ்தா) சிறுகுறிப்பு:
சாஸ்தா என்ற பெயருக்கு வழிநடத்துபவர் (அல்லது குரு) என்று அர்த்தம். அதனால் தான் ஐயப்பன் வழிப்பாட்டில் குரு முகமாகவே எந்த ஒரு செயலையும் செய்ய அறிவுரைப்பார்கள்.
ஸ்தல வரலாறு அடிப்படையில் ஞான சாஸ்தா பற்றி:
திருச்சூர் அருகே திருவல்லக்காவு என்ற இடத்தில் சாஸ்தாவை ஞானமூர்த்தியாக வழிப்பட்டு வருகின்றனர். இங்கு வித்யாரம்பம் செய்த (எழுத்துக்கள் தொடங்கும்) ஒரு குழந்தை அறிஞர் ஆவது நிச்சயம் என்ற காரணத்தினால் ஆயிரக்கணக்கனோர் தன் குழந்தைகளின் வித்யாரம்பம் இங்கு செய்வது வழக்கம்.
கும்பகோணம் அருகே ஆலங்குடி என்ற ஊரில் தக்ஷிணாமூர்த்தி கோவில் உள்ப்ரகாரத்தின் மேல்பத்தியில் கல்யாண சாஸ்தா உற்சவ மூர்த்தியாக வீற்றிரிக்கிறார். ஆந்திர பிரதேசம் அனந்தபூர் மாவட்டம், ஹேமாவதி என்ற ஊரில் சாஸ்தா மாதிரி குந்தியிட்டு உட்கார்ந்த நிலையில் தக்ஷிணாமூர்த்தி காட்சியளிக்கிறார்.
சாஸ்தாவின் சஹஸ்ரநாமங்களில் சிலவற்றை பார்க்கலாம்:
“ஓம் தக்ஷிணமூர்த்தி ரூபகாய நம; ஓம் வீணா புஸ்தக தர தக்ஷிணாமூர்த்தி சாஸ்த்ரே நம:” etc போன்ற நாமங்கள் நமக்குணர்த்தும் விஷயங்கள்: சாஸ்தா மாணிக்க வீணையை ஏந்திய கையுடன், கல்லால மரத்தின் அடியில் அமர்ந்துள்ள குருபகவான் போல் குரு ஸ்தானத்தில் அமர்ந்து மேதா தக்ஷிணாமூர்த்தியாக காட்சி அளிக்கிறார்.
“ஓம் சர்வ ஸ்த்ரார்த்ரார்த்த தத்வஞாய நம, ஓம் வித்யா விருக்ஷாய நம, ஓம் மூல வித்யா ஸ்வரூபகாய நம” etc என்றெல்லாம் சாஸ்த்ரு சஹஸ்ரநாமத்தில் படித்திருக்கிறோம் அல்லவா?
இவ்வுலகில் சிறப்பாக வாழ்வதற்குத் தேவையான எல்லாத் துறைகளைப் பற்றிய அறிவுவையும் தன் பக்தர்களுக்கு வழங்குபவர்.
இவ்வளவு விசேஷங்கள் நிறைந்த ஞான சாஸ்தாவுக்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்வது எவ்வளவு பெரிய பாக்கியம்? உங்களால் வர இயலவில்லை என்ற குரல் எங்களுக்கு கேட்கிறது. உங்களது இல்லத்தில் ஸ்ரீ ஞான சாஸ்தா படத்தை பூஜித்து இதன் பூஜா பலன்களை பெறலாம். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணை நிற்கட்டும். சுவாமியே சரணம் ஐயப்பா!!!
உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு (குடும்பத்தினர் பிறந்தநாள், திருமணநாள் etc.) அன்னதானம் செய்ய நினைத்தால் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
https://youtu.be/6Jq12uXhZdQ
0 comments:
Post a Comment