வேத சாஸ்தா விசேஷ பூஜை, வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோயில் 16/04/2022, சுபகிருது வருடம் சித்திரை மாதம் 3, சித்ரா பௌர்ணமி
ஸ்ரீ வேத சாஸ்தாவுக்கு ஏப்ரல் 16 ஆம் தேதி அன்று வேப்பம்பட்டு அஷ்ட சாஸ்தா திருக்கோயிலில் விசேஷ பூஜை, சாஸ்தா ஹோமம் நடக்க இருக்கின்றன.
நாம் பின்பற்றுவது சனாதன தர்மம்/சனாதன மதம். நம் சனாதன தர்மத்துக்கு ஆணிவேர் வேதங்கள். வேத சம்ரக்ஷணம் (அதாவது நம் வேதத்தை பேணிக் காப்பது) நாம் அனைவருடைய கடமையாகும். நாம் காக்கும் தர்மம் நம்மை காக்கும்.
*தர்மோ ரக்ஷதி ரக்ஷித:*
சாஸ்தாவின் முகத்திலிருந்து தான் வேதங்கள் தோன்றின. *ௐ வேத முகாயை நம:* என்று சாஸ்தா சஹஸ்ரநாமத்தில் உள்ளது.
இன்னும் சில நாமங்கள்:
* *ௐ மந்திர வேதினே நம:*
* *ௐ மஹா வேதினே நம:*
* *ௐ ரிக் யஜூஸ் சாம அதர்வ ரூபிணே நம:*
போன்ற நாமங்கள் நமக்கு உணர்த்தும் விஷயம்: வேதங்களுக்கு அதிபதியாக விளங்குபவர் சாஸ்தா.
சாஸ்தா நமஸ்கார ஸ்லோகங்களில் 2வது வரி *"விப்ர பூஜ்யம் விஸ்வ வந்தியம்"*,
அதில் *விப்ர பூஜ்யன்* பொருள்: வேதம் கற்றறிந்தவர்களால் பூஜிக்க படுபவன்.
சேலம் - எடப்பாடி அருகில் வெடிகாரம்பாளையம் என்ற கிராமத்தில் வேத மூர்த்தியாக சாஸ்தாவை வழிபட்டு வருகின்றனர்.
இவ்வளவு விசேஷங்கள் நிறைந்த வேத சாஸ்தாவுக்கு நடக்கும் பூஜையில் கலந்து கொள்வது எவ்வளவு பெரிய பாக்கியம்?
பக்தர்கள் அனைவரும் இந்த பூஜைகளில் கலந்துக்கொண்டு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற்று பேரின்ப பெருவாழ்வு வாழ்ந்திட அன்புடன் அழைக்கின்றோம். நடக்க இருக்கும் சிறப்பு பூஜைகளுக்கு சங்கல்பம் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு +919444109431 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
ஆன்மீக அன்பர்கள் பொருளாகவோ account இல் நேரடியாக காணிக்கை செலுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஸ்ரீ ஆதிபூத நாதர், ஐயப்பன் மற்றும் சின்மய கணபதி சிறப்பு அபிஷேகம் செய்ய தேவைப்படும் சாமான்கள்: விபூதி 1 கிலோ, பால் 3 லிட்டர், தேன் 1 கிலோ, பன்னீர் 5 லிட்டர், சந்தனம் 2 கிலோ, தாழம்பூ குங்குமம் 0.5 கிலோ, நெய் 0.5 கிலோ, இளநீர் 5, மஞ்சள் 0.5 கிலோ, தயிர் 3 கிலோ, சீக்காய் / ஸ்நான பொடி 0.5 கிலோ, ஜவ்வாது
உபயதாரர்கள் தங்களது பெயர் மற்றும் இதர விவரம் கொடுத்தால் எங்களது சிறப்பு ஆராதனை சங்கல்பத்தில் அவர்களது பெயரையும் சேர்த்துக்கொள்ளலாம். தங்களால் வர இயலாத சூழ்நிலையில் பிரசாதம் அஞ்சல் மூலம் அனுப்பப்படும்.
இதை தவிர உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு (குடும்பத்தினர் பிறந்தநாள், திருமணநாள் etc.) அன்னதானம் செய்ய நினைத்தால் முன்பதிவு செய்து கொள்ளலாம். அன்னதானத்துக்கு நன்கொடை அளித்து 80G வரிவிலக்கு பெறலாம். அன்னதானத்துக்கு நன்கொடை செலுத்துவதற்கு முன் +919444109431 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
0 comments:
Post a Comment