Swamiye

Saranam

Ayyappa

Saturday, 16 July 2022

சாஸ்தா திருக்கல்யாண வைபவம், சுபகிருது வருடம் வைகாசி விசாகம், 12-06-2022 ஞாயிறு காலை

 *சாஸ்தா திருக்கல்யாண வைபவம் அழைப்பிதழ்*

*நாள்: சுபகிருது வருடம் வைகாசி விசாகம், 12-06-2022 ஞாயிறு காலை*

*இடம்: வேப்பம்பட்டு (திருவள்ளூர் மாவட்டம்) அஷ்ட சாஸ்தா திருக்கோயில்* 

ஸ்வாமி சரணம்,

வரும் வைகாசி விசாகமன்று சாஸ்தா திருக்கல்யாண வைபவம் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமத்தில் நடக்க இருக்கின்றது. 

திருமண தடை உள்ளவர்கள் தங்களது ஜாதகத்தை கல்யாண உற்சவத்தின் போது சுவாமியிடம் வைத்து பிரார்த்தனை செய்து மங்கள அட்சதையுடன் எடுத்து செல்லும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தங்களால் வர முடியாத நிலையில் ஜாதகத்தை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் அனுப்பும் ஜாதகத்தை கல்யாண உற்சவத்தன்று சங்கல்பத்தில் சேர்த்து கொள்கிறோம்:

ஸ்ரீ அஷ்ட சாஸ்தா (ஐயப்பன்) திருக்கோவில்,

சாய் நகர்,

வேப்பம்பட்டு-89

திருவள்ளூர் மாவட்டம்

Pin code: 602 024

9444109431

மேலும் தாங்கள் விருப்பம்போல் சுவாமியிடம் வஸ்திரம் / புடவை சாத்தி எடுத்துக்கொள்ளலாம். 

திருமாங்கல்யம் பூரணா புஷ்களாவிடம் சாத்தி எடுத்துக்கொள்ளலாம். உங்கள் இல்லத்தில் சுபமங்களம் வரவேண்டி கல்யாண உற்சவத்தில் அளிக்கப்படும் மங்கள அட்சதையை பாதுகாப்பான அலமாரியில் / பூஜை அறையில் வைத்துக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

கல்யாண உற்சவம் அன்று நடக்க இருக்கும் அன்னதானதுக்கு நன்கொடை (account இல் நேரடியாக / பொருளாக) ஏற்கப்படும். மேலும் விவரங்களுக்கு  +917845787155 (சிவராஜ் குருஸ்வாமி) என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் 

பக்தர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்டு இந்த விழாவினை  சிறப்பிக்குமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

சாஸ்தா திருக்கல்யாண வைபவம் - சிறு குறிப்பு 

சாஸ்தா திருக்கல்யாணம் பஜனை பத்தியில் உருவாக்கி ஆன்மீக உலகிற்கு அளித்தவர் எங்கள் குருநாதர் பிரம்மஸ்ரீ விஸ்வநாத சர்மா. 

பக்தர்கள் இல்லத்தில் சுப மங்களம் ஏற்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தான் சீதா கல்யாணம், மீனாட்சி கல்யாணம், வள்ளி திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடக்கின்றன. எல்லாம்வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவதற்காக பற்பல அவதாரங்கள் எடுத்தார். அவரது லீலைகளை ஸ்ரவணம் செய்து, நாம சங்கீர்த்தனத்தில் பங்கேற்பது உத்தமமான விஷயமாகும். கலியுகத்தின் ப்ரத்யக்ஷ தெய்வமான ஹரிஹரசுதனுடைய கல்யாண குணங்களை பாடி ஆடுவதை ஸ்ரவணம் செய்வதன் மூலம் நல்ல வாழ்க்கை துணையை அடைகிறார்கள் என்பது அனுபவ பூர்வ உண்மையாகும்.  

சபரிமலையில் நித்ய பிரம்மச்சாரியாக இருக்கும் ஐயப்பனுக்கு எப்படி சாத்தியமாகும்? இந்த கல்யாணம் எங்கு நடந்தது? அதற்கு ஆதாரம் யாவை? போன்ற கேள்விகளுக்கு கல்யாண உற்சவத்தில் விளக்கம் அளிக்கப்படும்.

சாஸ்தா திருக்கல்யாணம் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியம். லலிதா சஹஸ்ரநாமத்தில் "பூரணா" என்றால் "எங்கும் வியாபித்து இருப்பவள்" என்று பொருள், "புஷ்கரா" என்றால் "எங்கும் நிறைவாகி இருப்பவள்" என்று பொருள். அங்கெங்கிநாதபடி எங்கும் பிரகாசமான காந்தமலை ஜோதியாய் பகவான் எல்லா இடத்திலும் பூரணமாக, புஷ்கரமாக காட்சி அளிக்கிறார் என்று பொருள் கொள்ளலாம். மேலும் பல்வேறு தகவல்கள் கல்யாண் உற்சவத்தில் அளிக்கப்படும்

0

0 comments:

Post a Comment

Contact Us

Adress/Street

Sree Ashta Sastha Temple, Veppampattu, Tamil Nadu 602 024, India

Phone number

+91 9444 10 431

Email

info@ashtasastha.org

Google Map

http://bit.ly/ashtasastha